×

அணிக்கொரை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி, ஜன.7: ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோகத் திட்டத்தினை வலுப்படுத்துவதின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டம், துனேரி ஊராட்சிக்குப்பட்ட அணிக்கொரை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக்கடையில்; விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனை நீலசிரி மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நியாயவிலைக்கடை பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post அணிக்கொரை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiikkorai Cooperative Credit Union Ration Shop ,Ooty ,Niukkorai Primary Agriculture Cooperative Credit Union ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...